இந்த 5 பழக்கங்கள் இருந்தால் நீங்கள் வெற்றிகரமானவர்!

Thanks to வரவனை செந்தில் & Vikatan.com

வாழ்க்கையில் குறை என்பது நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது. நமக்குப் பிடித்தமான எந்த ஒரு செயலையும் அளவோடு வைத்துக்கொண்டால் நாம் போகும் பாதையை அது எப்போதுமே பாதிக்காது. டிவி பார்ப்பதில் ஆரம்பித்து மொபைல் கேம்ஸ், வீக் எண்ட் பார்ட்டி என உங்களின் லைஃப் ஸ்டைலைப் பாதிக்காத எதுவுமே சரிதான். ஆனால், அதை நீங்கள் கைக்குள் வைக்காமல் போனால் நிச்சயமாக உங்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

வெற்றிகரமானவர்களிடம் இருக்கும் குணங்கள் குறித்து செய்யப்பட்ட மிகப்பெரிய ஆய்வு ஒன்றில், கீழ்க்காணும் ஐந்து குணங்களைப் பட்டியலிடுகிறார்கள். இதன்படி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நிச்சயமாக வெற்றிகரமான மனிதராகத் திகழ்வீர்கள்.

அடுத்த நாளுக்கான திட்டமிடல் – ஒவ்வோர் ஆண்டும் புது வருடம் பிறக்கும்போது நாம் சில உறுதிமொழிகளை எடுப்போம். அது அடுத்த நாள் வரை தாங்குகிறதா அல்லது சில வாரங்கள் செல்கிறதா என்பது நமது மனத்திடத்தைப் பொறுத்துத்தான் சொல்லமுடியும். ஆயிரத்தில் ஒரு சிலர்தான் இதுபோன்ற புத்தாண்டு உறுதிமொழியைக் காப்பாற்றுகிறார்கள். நாம் அவ்வளவு மெனக்கெட வேண்டாம். ஒவ்வொரு நாளும் படுக்கப்போகும் முன்பு, அடுத்த நாள் செய்யவேண்டிய வேலைகளை நினைவில்வைத்துக்கொள்வோம். முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய பாலபாடம் இதுதான்.

நேர மேலாண்மை –  திட்டமிட்ட வேலையை ஒழுங்காகவும் கவனம் சிதறாமலும் செய்து முடிக்க இது மிகவும் முக்கியம். உங்கள் வேலைகளில் உடனே செய்யவேண்டியது எது, அதிக நேரம் தேவைப்படும் வேலை எது எனக் கணக்குப்போட்டு அதற்குத் தகுந்தாற்போல் வேலையைத் தொடங்க வேண்டும். 

அளவான செலவுகள் –   நடை,உடை போன்றவற்றில் உங்களுக்கெனத்  தனிப்பட்ட ஸ்டைல் வைத்திருப்பது போல, செலவழிப்பதிலும் உங்களுக்கெனக் குறிப்பிட்ட ஸ்டைல் இருக்கட்டும். வாழ்க்கையில் தாழ்வுகளும் உயர்வுகளும் அனைவருக்கும் இருப்பதுதான். பொருளாதாரச் சூழல் எப்படி இருந்தாலும் அளவான செலவுகள் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். கையில் பணம் இருக்கிறதென அள்ளி வீசவும் வேண்டாம்,இல்லையென்று சோர்ந்துபோகவும் வேண்டாம். உடைகளில் ஆரம்பித்து உணவு,கேளிக்கை என அளவான செலவுகள் செய்யும் வாழ்க்கை முறைக்கு மாறினால், நீங்களே எதிர்பாராத வகையில் பணம் சேமிப்பாகும். 

உடல்நலம் – இந்த உலகில் உங்களைத்தவிர வேறு யாராலும் உங்கள் நலத்தைப் பற்றி அக்கறை கொள்ளமுடியாது. உங்கள் உடல்நலம் என்பது மிகப்பெரிய முதலீடு. உலகையே வெற்றிகொண்டு இந்தியா வரை வந்த மாவீரன் அலெக்ஸாண்டர் 33 வயதிலேயே காய்ச்சலில் இறந்துபோனார். அதிகாலை எழுவது,உடற்பயிற்சி, ஓட்டம், சைக்கிளிங் என உற்சாகமாய் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.

சரிபார்ப்பு – ஒவ்வொரு நாளின்போதும் அன்றைக்கு உங்களின் எதிர்கால லட்சியத்துக்காக என்ன செய்தீர்கள் என சிந்தித்துப் பாருங்கள். ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி ,அன்றைக்குச் செய்த வேலைகள்,அவற்றின் பலன்கள், அடுத்து செய்யப்போகும் வேலை எந்த அளவுக்கு உங்களின் வளர்ச்சிக்கு உதவப்போகிறது போன்றவற்றைக் கணக்கிட்டுப் பாருங்கள். இது ஒரு முக்கியமான யுக்தி. தவறான வழிமுறைகளோடு தங்கள் கனவை நோக்கிய பயணத்திலிருந்த பல வெற்றியாளர்களைக் காப்பாற்றிய பழக்கம் இது.

மேற்குறிப்பிட்ட ஐந்து குணங்கள் உங்களிடம் இருந்தால், நிச்சயமாக வெற்றியாளராகும் பயணத்தில் இருப்பீர்கள். இல்லையெனில், இவற்றை இன்றே உங்கள் வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவாருங்கள். வாழ்த்துகள்! 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s