பெரியாரும் பெரியவரும் – முன்னுரை

================தொடர் பற்றிய முன்னுரை=========================
தந்தை பெரியார் என்று உலகம் முழுவதும் சீர்திருத்தவாதிகளால் அழைக்கப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்கள், சமூக சீர்திருத்ததிற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.

மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது. மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும் என்று தனது வாழ்கை முழுவதும் மிகவும் கடுமையாகப் போராடியவர்.

==========================================================================

பெரியவா என்று உலகம் முழுவதும் பக்தர்களால் அழைக்கப்பட்ட காஞ்சிப் பெரியவர் அவர்கள், துறவு நெறி பூண்டு இறை பணி வளர்த்தவர். காஞ்சிமடம் வந்து, தம்மிடம் ஆசிபெற நினைப்பவர்களுக்கு அருளாசி வழங்கியதோடு, வழிகாட்டியாகவும் இருந்தவர்.

பெரியவா, மனிதனின் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை மூலப்பொருளாக்கி தர்மம், ஞானம், ஈகையை அவர்களிடம் வளர்ப்பதை தன் வாழ்நாள் முழுவதும் பரப்பியவர். ”நம் கடன் பணிசெய்து கிடப்பதே” என்பதுதான் தன் வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டவர்.
==========================================================================
கடவுள் இல்லை, கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளை கண்டுபிடித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுள் இல்லவே இல்லை
— தந்தை பெரியார்

 

‘நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன’. ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. ‘என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும் ஒரு பொருளும் இல்லை’. இங்கே ஆத்மா எல்லாலற்றையும் கடந்தது என்று தத்துவம் பேசப்படுகிறது.
— மகா பெரியவர்
==========================================================================
தமிழகத்தின் மிகப்பெரும் இரண்டு தலைவர்கள் மனித வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கை முறைகளை தத்தமது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்திய கருத்து தொகுத்து வாரம் தோறும் காண்போம். நன்றி. வணக்கம்.

உங்களது மேலான கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

சி. செந்தில் முருகன்
csenthilmurugan@thaaimanam.com
==========================================================================