நவக்கிரகங்களை வலம் வருவோமே…!

வக்கிரகங்களின் இடமாற்றத்துக்கும், மனிதனின் மனமாற்றத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது
ஜாதகக்கோளாறுகளால் அவதிப்படும் அனைவரும் நவகிரக ஸ்தலங்களுக்கு சென்று வந்தால், கண்டிப்பாக வாழ்க்கையில் நல்ல மாற்றம் நிகழும் என பெரியோர்கள் கூறுகிறார்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம்.

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும்.

1. திங்களூர் சந்திரன்
நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும்.

2. ஆலங்குடி குரு பகவான்
கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யலாம்.

3. திருநாகேஸ்வரம் ராகு
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.

4.சூரியனார் கோவில் சூரியன்
கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல், சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது

5. கஞ்சனூர் சுக்கிரன்
சூரியனார் கோவிலிலிருந்து சுக்கிர ஸ்தலமான  கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம்.

6. வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய்
மயிலாடுதுறையில் இருந்து  13 கிலோமீட்டர் தூரத்தில் சென்னை செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ளது செவ்வாயின் அதிபதி வைத்தீஸ்வரன்  கோவில்

7. திருவெண்காடு புதன்
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 16 கிலோமீட்டரில் திருவெண்காடுஸ்தலம் உள்ளது. வால்மீகி ராமாயணத்தில் இதனைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஆகையால் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கே ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.

8. கீழ்பெரும்பள்ளம் கேது
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப் பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.

நவக்கிரக ஸ்தலங்களின் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம்.

9. திருநள்ளாறு சனி

கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலை வில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக அடைந்து விட முடியும். அங்கே ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.
நவக்கிரகங்களைச் சுற்றி வந்து வழிபடும்போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.
அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அது எத்தனை சுற்று தெரியுமா?

சூரியன் – 10 சுற்றுகள்
சுக்கிரன் – 6 சுற்றுகள்
சந்திரன் – 11 சுற்றுகள்
சனி    – 8 சுற்றுகள்
செவ்வாய் – 9 சுற்றுகள்
ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன் – 5, 12, 23 சுற்றுகள்
கேது – 9 சுற்றுகள்
வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்

நவக்கிரகங்களை வழிபடுவோம். வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுவோம்!

 

Thanks to ஷான் (மயிலாடுதுறை)

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=44092

From my native place

https://www.google.co.in/maps/dir/Mannargudi,+Tamil+Nadu/Kumbakonam,+Tamil+Nadu/Thirunageswaram,+Tamil+Nadu/Suryan+Kovil,+Thanjavur,+Tamil+Nadu/Kanjanoor,+Tamil+Nadu/Vaitheeswarankovil,+Tamil+Nadu/Thiruvengadu,+Tamil+Nadu/Kedhu+Temple,+Vanagiri,+Tamil+Nadu/Thirunallar,+Puducherry/Sri+Vanchinadha+Swamy+Temple,+Nannilam-Tiruvarur-Srivanchiyam+Temple+Road,+Srivanchiyam,+Tamil+Nadu/@10.941154,79.323856,10z/data=!3m1!4b1!4m62!4m61!1m5!1m1!1s0x3a554c33a1439753:0x843b50ed6a3c7496!2m2!1d79.4507152!2d10.6648689!1m5!1m1!1s0x3a5532b360353419:0x9ecb5d94413ad35!2m2!1d79.3881132!2d10.9616945!1m5!1m1!1s0x3a5532636186cc87:0xe10a5e6c380f5065!2m2!1d79.4287481!2d10.9652923!1m5!1m1!1s0x3a552e84530eb3f9:0xc48cf108dcf8222d!2m2!1d79.478638!2d11.031074!1m5!1m1!1s0x3a552eebfacb230b:0x8135db44e3916342!2m2!1d79.4942916!2d11.0419481!1m5!1m1!1s0x3a54dfba5310d7ad:0xc8411c41ced29f63!2m2!1d79.7147468!2d11.1961922!1m5!1m1!1s0x3a54e1e703a4be6b:0xbedb48c6c04fe564!2m2!1d79.8086621!2d11.1756604!1m5!1m1!1s0x3a551dd74cdf1d59:0x1b2a042b7a68649a!2m2!1d79.835233!2d11.135124!1m5!1m1!1s0x3a5516f7ab3be1db:0x92ef1e1bb6f4746d!2m2!1d79.791667!2d10.925556!1m5!1m1!1s0x3a5539e83a24ac5b:0x82b4ee1b58fe91cd!2m2!1d79.573464!2d10.871634!3e0