கேள்வி இங்கே பதில் எங்கே?

பொதுக்கூட்டம் நடத்த முடிகிறது, மகாநாடு நடத்த முடிகிறது, அமைச்சரவைக் கூட்டம் நடத்த முடிகிறது, தெருவில் ஓடும் ஆட்டோவிற்க்கு மீட்டர் பொருத்த முடியவில்லை. 5 ரூபாய் அல்லது 50 ரூபாய்-மீட்டர் பார்த்து பணம் கொடுத்தால் – ஆட்டோ ஓட்டுபவர்க்கும் பொதுமக்களுக்கும் நிம்மதி – நாகரீகம் குறைந்ததிற்க்கு காரணம் இதுவா?

தினம் ஒரு கேள்வி?

தவறு செய்கிறவர்களை தண்டிக்க அரசு. தமிழக அரசே சாராயம் விற்கும் கேவலத்தை யார் தண்டிப்பது? தமிழனின் நாகரீகம் குறைந்ததிற்க்கு முதல் காரணம் இதுவா?

தினம் ஒரு கேள்வி?

எந்த ஒரு முடிவிற்கு பிறகும் புதிய தொடக்கம் உண்டு, எந்த ஒரு தொடக்கத்திற்க்கும் பிறகும் ஒரு முடிவு உண்டு – இது எவ்வாறு நடைபெருகிறது? – எவர் நடத்துகிறார்?

தினம் ஒரு கேள்வி

கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது, கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது. பிறகு ஏன் கடவுள் அணைத்தையும் அணைவருக்கும் கொடுக்க கூடாது?