மதுவிலக்கு – ஆங்கில அரசும் சுதந்திர இந்தியாவும்

1860 களில் ஆங்கில அரசாங்கம் மதுக்கடைகளை ஆங்காங்கு விரிவுபடுத்தி ஏராளமான நிதி திரட்டியது. இதை கண்டித்தார் காங்கிரசின் நிறுவனர் ஆலன். சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளாகவும் மதுக்கடைகளை நம்மால் குறைக்க முடியவில்லை. ஏன் என்றால், நமது அரசுக்கு மிகப்பெரிய வருமானம் இழப்பு. இதற்கு மாற்றுவழிதான் என்ன?

குழந்தைக்கு தேவையற்றவற்றை பெற்றோர்கள் எட்டாத இடத்தில் வைப்பார்கள். அதுபோல படிக்காத ஏழை தொழிலார்களுக்கும், ஆட்டோ வோட்டுனர்களுக்கும், விவசாயிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் எட்டாத இடத்தில் மதுக்கடையை வைத்து முதலில் இந்த பழக்கத்தை குறைக்க வேண்டும். கல்வி அணைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.

அரசு செலவுகளை குறைத்துக்கொண்டு மதுவிலக்கு கொள்கையை உடனடியாக அமல் படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் அனைவரும் சுதந்திர (மது) அடிமைகள் என வருங்கால சந்ததியரால் திராவிட வரலாற்றில் பதிக்கபடுவோம்.

Thanks to Dinamani – http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=14180&boxid=24237437&archive=true