நாடு முழுவதும் 551 நவோதயா வித்யாலயா பள்ளிகள் : 24 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒன்று கூட இல்லை

நாடு முழுவதும் 551 நவோதயா வித்யாலயா பள்ளிகள் : 24 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒன்று கூட இல்லை

     நன்றி : தினமலர் – ஜூன் 11,2009,00:00  IST

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இருந்தபோது, "நவோதயா வித்யாலயா பள்ளிகள்என்ற ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார். சிறந்த கல்வி, நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. கிராமப்புற குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்றி, நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற குழந்தைகளுக்கு வழங்க உருவாக்கப்பட்ட திட்டம் தான் நவோதயா வித்யாலயா திட்டம்.

ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே இந்தப் பள்ளிகளில் நடைபெறும். தங்குமிட வசதி, உணவு, சீருடை என அனைத்தும் இலவசம். மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கிறது. சி.பி.எஸ்.., பாடத் திட்டத்தில் இந்த பள்ளிகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், இப்பள்ளிகளில் சேர முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 75 சதவீதம் கிராமப்புற ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 3 சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், எஞ்சிய இடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு மூலம் இப்பள்ளிகளுக்கான மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நுழைவுத்தேர்வு, அரசின் அங்கீகாரம் பெற்ற 20 மொழிகளில் நடக்கிறது. ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளிலும், "லேட்டரல் என்ட்ரிமூலம் சேர முடியும். உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் 200 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழை மாணவர்கள் தங்கள் வறுமை, சமூக பின்னடைவை புறந்தள்ளிவிட்டு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த உன்னத திட்டத்தில், தமிழகம் இடம்பெறவில்லை என்பது தமிழக கல்வி வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s